Friday, October 23, 2009

"கடவுளாக" மாறுங்கள்!!!

அந்த அறைக்குள் மிக இறுக்கமான அமைதி நிலவுகிறது.... முதுகு தண்டை சில்லிட வைக்கும குளிர் அந்த அறையில் நிறைந்திருக்கிறது. சில பேர் அங்கு காத்திருக்கிறார்கள்... அந்த அறைக்கு வெளியே காலணிகள் கழற்றி வைக்கபட்டுள்ளது. இன்னும் சில பேர் தங்கள் காலணிகளை கழற்றி வைத்துவிட்டு மிகுந்த பய பக்தியுடன் அந்த அறைக்குள் வருகிறார்கள். யாரும் யாரிடமும் பேசவில்லை... ஒருவருக்கொருவர் கண்களால் பேசிகொள்கிறார்கள். காரணம் இன்னும் சிறிது நேரத்தில் அந்த அறைக்கு "கடவுள்" வரப்போவதாக அவர்களுக்கு சொல்லப்பட்டு இருந்தது. கடவுளின் "வாசனையை அவர்கள் நுகர்வதற்காக வாசனை திரவியங்களையோ, பூக்களையோ அணிந்திருக்க அந்த அறைக்குள் தடை செய்யப்பட்டு இருந்தது. "சற்று நேர காத்திருப்புக்கு பின்பு "கடவுள்" வருகிறார். அனைவரும் அவரையே ஆர்வத்துடன் பார்த்துகொண்டிருக்கிறார்கள்.. "கடவுளை" அவர்களுக்கு அறிமுகம் செய்வதற்கு வயதானவர் ஒருவர் வந்திருக்கிறார். அவர் முதலில் "கடவுளின்" அருகில் சென்று சில வினாடிகள் அவரை தொட்டு பார்த்து விட்டு, சுற்றி இருந்தவர்களை "கடவுளின்" அருகில் அழைக்கிறார். அவர்களும் ஒருவர் ஒருவராக "கடவுளின்" அருகில் வந்து அவரை தொட்டு பார்கிறார்கள். "கடவுளை" எல்லோரும் வெறும் கையால் மட்டுமே தொட்டு பார்க்க அனுமதிக்கபடுகிறார்கள். அனைவரும் "கடவுளை" ஆசை தீர தொட்டு பார்கிறார்கள். அந்த .....
அய்யோ ... அய்யயோ .... நிப்பாட்டுயா உன் பொங்கசோர ... யாருய்யா அந்த "கடவுள்" அப்பிடீங்கரீங்களா?
இறுதி ஆண்டு மருத்துவம் படிக்கும் பயிற்சி மாணவர்களுக்கு "உடல் கூறு" பற்றி படிக்க கொடுக்கப்படும் உயிரற்ற மனித உடல்களே "கடவுள்" என்று அழைகப்படுகிறது.
அங்கு "கடவுளுக்கு" அளிக்கப்படும் 'மரியாதை' மிக அதிகம். "கடவுள்" மருதுவமனைக்கு வந்தவுடன் அவர் உடலில் உள்ள ரத்தம் முதலில் ஊசி மூலம் முழுவதுமாக எடுக்கப்பட்டு விடுகிறது. பின்பு "பார்மலின் திரவம்" முழுவதுமாக நிரப்பப்படுகிறது. பயிற்சி மருத்துவர்கள் கையுறை எதுவும் அணியாமல் தங்களுடைய வெறும் கைகளினால் மட்டுமே அவருடைய உடலை தொடவும், சோதிக்கவும் அனுமதிக்கபடுகிறார்கள். மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்கு "கடவுள்" கிடப்பது மிகவும் கஷ்டமாக இருந்து வந்துள்ளது. ஆனால் ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நடிகர் கமல்ஹாசன் தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுப்பதாக சொன்னவுடன் நிறைய பேர் தங்களது உடலையையும் கொடுப்பதாக சொல்லி அதன் பேரில் தற்போது "கடவுளின்" வருகை அதிகரித்து உள்ளதாம். சினிமா ரசிகர்கள் எல்லாம் "விசிலடிச்சான் குஞ்சுகள்" மட்டும்தான் என்ற கருத்துள்ளவர்கள் இந்த செய்தி படித்த பின்பாவது தங்களது கருத்துக்களை மாற்றிகொள்ள வேண்டும். உடலை தானமாக கொடுக்க, தானம் கொடுப்பவர் மட்டுமின்றி, அவரது உறவினர்களின் சம்மதமும் வேண்டும். இயற்கையாக இறந்தவர் உடலே ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளபடுகிறது. உடல் ஆராய்ச்சிக்கு எடுத்துகொள்வதற்கு முன்பாக உறவினர்கள் கேட்டுகொண்டால் உடல் அவர்களிடம் திரும்ப அளிக்கப்படும். சமீபத்தில் தமிழக துணை முதல்வர் "ஸ்டாலின்" மற்றும் அவரது துணைவியார் தங்களது உடலை தனமாக எழுதி தந்துள்ளனர். இறப்புக்கு பின்பு யாருக்கும் பயனற்று போகும் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுத்து "கடவுளாக" மாறுங்கள்!!!

Wednesday, October 21, 2009

திருப்பங்களும் ... தீர்வுகளும்

மனித வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களை கவனித்து பார்த்த போது எனக்கு சில ஆச்சரியங்கள் காத்திருந்தது... முக்கியமாக, பெரிய திருப்பங்களுக்கு சிறிய காரணங்களே விதையாக இருப்பதையும், அவற்றை நாம் கவனிகாமலோ அல்லது கவனித்தவற்றை மிக விரைவில் மறந்தோ விடுகிறோம். அவ்வாறு விட்டுவிடாமல் அவற்றை நமது கவனத்தில் ஏற்றி வைத்துகொண்டால், எதிர் வரும் காலங்களில் நமது வாழ்வில் ஏற்படும் எதிர்மறை திருபங்களின் போது, அதிலிருந்து நம்மை காப்பற்றிக்கொள்ள இந்த பயிற்சி உதவும். நான் அவதானித்த சில திருப்பங்களும், அவற்றுக்கு காரணமாக இருந்த மிகசாதாரணமான காரணங்கள் இரண்டை மட்டும் இங்கே சொல்கிறேன்.
அப்போது நானும், ரகுவும் +1 படித்துக்கொண்டு இருந்தோம். எங்களது பெரியம்மா பையன் சீனு +2 படித்துக்கொண்டு இருந்தான். அவனுக்கும் அன்றுதான் exam result வந்திருந்தது. அன்று சாயங்காலம் நானும் ரகுவும் அவன் வீட்டிற்கு சென்று அவனை பார்த்து விட்டு வரலாம் என்று போயிருந்தோம். அவனும் நல்ல mark வாங்கி இருந்தாலும் engineering சேர்வதற்கு வேண்டிய mark வரவில்லை என்று வருத்தப்பட்டு கொண்டு இருந்தான். அப்போதெல்லாம் private engineering college கிடையாது. சீட் கிடைப்பது பெரிய விஷயம். நாங்கள் மூவரும் வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந்த போது அவனுடைய friend ஒருவன் ஒரு சிறிய cycle ல் வந்தான். அப்போதுதான் குளித்திருபான் போல.. அமைதியான அவனுடைய முகத்தில் தெரிந்த பெருமிதமே அவனுடைய நல்ல mark -ஐ சொல்லியது. இரண்டு மூன்று college -ல் seat கிடைக்கும் என்றாலும், எந்த college -ஐ select செய்வது என்று தெரியவில்லை என்றும், தனக்கு கோயம்புத்தூரில் உள்ள PSG -ல் படிக்கலாம் என்ற எண்ணம் இருப்பதாகவும் சொன்ன அவனுடைய அன்றைய பேச்சும், body language -ம் எனக்குள், நாமும் engineering college சேர வேண்டும் என்ற கனவை விதைத்து வளர்ததை என்னால் இன்று உணர முடிகிறது. அதன் பின்பு அவனை நான் சந்திக்கவே இல்லை. எனக்கு திருப்பத்தை ஏற்படுத்தவே பிரசன்னம் கொடுத்திருப்பான் போல.
இரண்டாவதாக .... செல்ல மகள் சுபாசினி பிறந்த ஆறு மாதத்தில் இருந்து "கை கட்டை விரல் சூப்பும்" பழக்கத்தை ஆரம்பித்தாள். நாங்களும் பல வழிகளில் முயற்சித்தும் அந்த பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. இப்படியே நாட்கள் ஓடிவிட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. பார்பவர்கள் எல்லோரும் எப்படியாவது நிறுத்திவிடுங்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு தெரிந்த வழிகளில் ஒன்றை சொல்லிவிட்டு செல்வார்கள். அவளுடைய சூப்பிய கட்டை விரலும் புண்ணாகி வீங்க தொடங்கி விட்டது. நாங்கள் மிகவும் கவலை அடைய ஆரம்பித்தோம். இப்படியே போய் கொண்டு இருந்த போது... எங்க தெருவிற்கு அடுத்த தெருவில் ஒரு பையனுக்கு காதுகுத்தும் விழா நடந்தது.. அவர்கள் அழைப்பின் பேரில் சுபஷிணியோடு நாங்களும் சென்றிருந்தோம். அந்த குட்டி பையனுக்கு காது குத்தும் போது, சுபாஷினி என்னிடம், அந்த பையனுக்கு என்ன செய்கிறார்கள் என்றாள்.. அதற்கு நான், "அந்த குட்டி பையன் விரல் சூப்புரானாம் அதனால் அவன் காதை குத்துறாங்க" என்றேன் குத்து மதிப்பாக... உடனே, வாயிலிருந்து விரலை எடுத்தவள் தான்.. பின்பு போடவே இல்லை.. அன்று இரவு தூக்கத்தில் அவளையும் அறியாமல் விரலை வாய்கருகில் கொண்டு சென்றாலும், சட்ரென்று எடுத்து விடுவாள். இரண்டு நாட்களுக்கு அதை மறக்க படாதபாடுபட்டாள். தூக்கம் வராமல் அழுதாள்... அழுத களைப்பில் தூங்கினாள். என்றாலும் நாங்களே எதிர்பாராமல் ஒரே வாரத்தில் விரல் சூப்பும் பழக்கம் சுத்தமாக அவளிடம் இருந்து காணமல் போய் விட்டது. இதற்கு எல்லாம் அந்த ஒரே ஒரு சம்பவம்... ஒரே ஒரு வாக்கியம்....காரணமாக இருந்தது.

தண்டிக்கும் உண்மை

அன்றும் வழக்கம் போல் வேலைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தேன்.... அம்மாதான் ஞாபகபடுத்தினாள். இந்த வாரம் முக்கியமான வேலை எல்லாம் இருக்கு.. ஆபீஸ் வேலய கொறசுக்கோ... நேரத்தோட வீட்டுக்கு வந்திருபான்னாங்க, சரின்னுதான் சொன்னேன்.. இருந்தாலும் வேல நம்மள விட்டாதானே ... ஒரு பி.எச்டி வேலை ... சத்தியானு ஒரு பொண்ணு ... பாடகர் ஹரிகரன் சொந்த அக்கா பொண்ணு... மதுரைல நம்ம ஏரியா.. இறுதி கட்ட வேலை இரண்டு நாளில் முடியும் என்று எதிர்பார்த்து முடியல... மறுநாள் வீட்ல விசேஷம்... இரவு முழுவதும் வேலை பார்த்தும், காலை மணி ஆறு ஆகிவிட்டது. வீட்டல இருந்து போன்... அம்மாதான் பேசினாள்... எல்லோரும் வந்துடாங்க.. இதுக்கு மேல லேட் பண்ணாத... உடனே வா... முக்கியமா, சென்னைல இருந்து அக்கா-மாமா வந்தாச்சு அப்டீனாங்க. நானும் சத்தியாவிடம் சொல்லிட்டு கிளம்பலாம்னா, துணைக்கு வந்திருந்த அவங்க அப்பாவும், அந்த பெண்ணும் என் கால்ல விழாத குறையா ... சார், இன்னைக்குதான் கடைசி ... நீங்க இப்போ போய்ட்டு, குளிச்சுட்டு, சாப்டுட்டு உடனே வந்துருங்க அப்டின்னு சொன்னாங்க ... இல்லைங்க, அது ரொம்ப கஷ்டம்ங்க ... நம்ம ஆபீஸ்ல உள்ளவங்க மீதி உள்ள உங்க வேலைய நல்லபடியா முடிச்சு தருவாங்க .. நான் திரும்ப வர இரண்டு மூணு நாள் ஆகும்னு சொல்லி பார்த்தேன்... அப்புறமும் அவர்கள் மசிவதாக இல்லை... அவங்க அப்பா, சார் நீங்க தான் முடிச்சு தரனும்... கொஞ்சம் திரும்ப வந்தீங்கன்னா சாயங்காலதுக்குள்ள முடிச்சுடலாம் அப்படீன்னார்... அப்பதான், நான் சொல்ல வேண்டியதாகிவிட்டது ... அய்யா எனக்கு நாளைக்கு காலைல கல்யாணம்.. இன்னிக்கு மாப்பிள்ளை அழைப்பு .. சொந்தகாரங்க எல்லோரும் வந்து, எங்க வீட்ல வெயிட் பண்றாங்க... அதுனால நான் இப்போ வீட்டுக்கு போக வேண்டி இருக்குதுன்னு உண்மைய சொன்னேன் .... பதறி போன அவர் ... சாரி சார், உடனே கிளம்புங்கனு சொல்லி என்னை அனுப்பி வைத்தார்.
இது நடந்து ஆறு ஏழு வருடங்கள் கழித்து சத்தியாவின் அப்பாவை ஒரு நண்பர் வீட்டில் சந்தித்தேன்... அப்போது அவர் என் நண்பரிடம் என்னை பற்றி சொல்லும் போது, இவர் மட்டும் அன்னிக்கு உண்மைய கடைசி வரைக்கும் சொல்லாம இருந்துருந்தா, இவர வீட்டுக்கு போக விட்டுருக்கமாட்டேன். நல்ல வேலை ஒரு கல்யாணம் என்னால நிற்க தெரிஞ்சது.. அப்படீன்னார்.
என்ன செய்வது?..உண்மை பேசினாலும் சில சமயம், தெய்வம் நம்மள தண்டிக்குதே??!!!

Thursday, October 15, 2009

அப்பாவிடம் இன்னொரு சுவாரசியமான விஷயம்.... எல்லோருக்கும் பட்ட பெயர் வைப்பது.. நாங்களும் அந்த பெயர்களையே சொல்லி, சொல்லி அவர்களது சொந்த பெயர் மறந்து போகும். சில சாம்பிள்கள் ....
பொக்குலு .... (உங்கள் மன கண் முன் ஒரு உருவம் வந்திருக்குமே?)
கும்பிடிகாய .... (")
இந்திரா - மூக்கு தான் காரணம்
பக்தடு - (தினம் ஒரு பத்து நிமிடம் மட்டும் சாமி கும்பிடும் ஒரு அப்பிராணிக்கு வைக்கப்பட்ட பெயர், அப்டீனா அரை மணி, ஒரு மணி சாமி கும்பிடுவோருக்கு - ஜஸ்ட் திங்க்)
மயிலு - எப்போதுமே மயில் கலர் சேலை கட்டும் ஒரு மாமி
சப்பாணி - (மயிலு புருஷன்)
நூன - ஒரிஜினல் பெயர் சித்திரா (நல்லெண்ணெய் விளம்பரத்தில் வந்த சித்திராவை ஞாபகபடுத்திக் கொள்ளுங்கள்)
கொய்ய - இதற்கு மேல் ஒல்லியாக இருக்க முடியாது அப்படின்னு இருந்த ஒரு போடிகார அம்மாவிற்கு வைக்கபட்ட பெயர்)
குட்டி அம்ம - போடியில் உள்ள எல்லா சினிமா கொட்டகைக்கும் சாயங்காலம் ஆச்சுனா விசிட் அடிக்கும் ஒரு அம்மாவின் ஞாபகார்த்தமாக இன்றும் பல பேருக்கு இலவசமாக வழங்கப்படும் அவார்ட்.

மற்றும் இன்னும் பலர்....

இதில் சப்பாணி (சுப்பிரமணி), நூன (சித்திரா) தவிர வேறு யார் பெயரும் எங்கள் நினைவில் இல்லை.

எல்லாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள் !!!!

இப்படிக்கு
முள்ளி பில்லி (கண்ணுதான் காரணம்)

Wednesday, October 14, 2009

பாசகார பய ஊரு

அன்றும் வழக்கம் போல் "குட்டி டாட்டா" சும்மா ஒரு ரவுண்டு டூ வீலர்ல.. குட்டி பையன் அருணை ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள ரயில்வே கேட் வரும்போது கேட் போட்டு இருந்தது. கொஞ்சம் தள்ளி, கடந்து செல்லும் ரயில் தெரியும் படி அருகில் உள்ள பெட்டி கடை வாசலில் வண்டியை நிறுத்தி நானும் அருணும் காத்திருந்தோம். கேட் திறந்தவுடன் மக்கள் அவசர அவசரமாக, ஒருவர் மேல் ஒருவர் இடித்து கொண்டு ரயில்வே லைன்ஐ கடந்து கொண்டு இருந்தார்கள். அப்போதுதான் அவனை கவனித்தேன்.. புதிய பைக்.. முன்புறம் ஒரு குட்டி பையன்.. அருண் வயது இருக்கும்.. மிக வேகமா ரயில்வே லைன்ஐ கடந்து வந்து நாங்கள் நின்று கொண்டு இருக்கும் பெட்டி கடை அருகில் உள்ள சிறிய திருப்பத்தில் திருப்பும் போது வேகம் காரணமாக வண்டி சரிந்து இருவரும் விழுந்தார்கள். நான் அருணை இறக்கி விட்டு, போவதற்குள் டீ கடையில் டீ குடித்து கொண்டு இருந்த பெரியவர் ஒருவர் வேகமாக ஓடி சென்று விழுந்த வண்டியை தூக்கிய ஜோரில், யாரும் எதிர்பரக்கவில்லை, அந்த அடி அடி அடித்தார் அந்த ஆளை. சரியான திட்டு வேறு. ஏன்டா சின்ன பையனை முன்னாடி வெச்சுகிட்டு இந்த ஸ்பீட்ல வரலாமாடா? அடித்த அடி தாங்காமல் வேகமாக வண்டியை எடுத்து கொண்டு நிமிடமாக இடத்தை காலி செய்தான் அவன். திட்டி கொண்டே டீ கடைக்கு வந்தவரை அங்கு இருந்த டீ கடை கடைகாரர் கேட்டார், அந்த ஆள் உங்களுக்கு உறவா? அதெல்லாம் ஒன்னும் இல்லை, கிறுக்கு பய இந்த ஸ்பீட்ல வண்டி ஓட்டலாமா? அதுவும் சின்ன பையன முன்னாடி வெச்சுகிட்டு? என்றார். எனக்கு மனதில் தோன்றியது இதுதான்... அவனுக்கும், அவருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, ஆனாலும் அவர் அவன் செய்த தப்பை உரிமையோடு கண்டிக்கிறார்... அவனும் ஒரு சின்ன எதிர்ப்பின்றி அதை எதிர்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றது எனக்கு சொல்லாமல் சொல்லியது இதுதான் ... பாசகார பய ஊரு அய்யா இது ... இங்கு வாழ்வதுதான்சரி... நமக்கு அரணாக உறவுகள்தான் வரவேண்டும் என்பது இல்லை ... இந்த ஊரும், மனிதர்களும்மே அதை பார்த்துகொள்வார்கள்

Tuesday, October 13, 2009

ரசிக மகா ஜனங்களே!!!

நாங்க (அதாவது வணிகர்கள்) கொஞ்சம் பாவப்பட்ட ஜென்மங்கள் அப்படின்னு சொல்லலாம். எப்படி, இப்படி பொசுக்குனு சொல்லுறியே அப்படின்னு கேட்டிங்கன்னா...
எங்களுக்கு ஒரு நல்ல "பொன் மாலை பொழுது" கிடையாது... சாயங்காலம் ஐந்து மணிக்கு மேல்தான் வேலையே.. இரவு பத்து, பதினோரு மணிவரைக்கும் போகும்.. சாயங்காலம் குடும்பத்தோடு வண்டி, வாகனத்தில் சிரித்து கொண்டும், பேசி கொண்டும் செல்பவர்களை ஏக்கதோடு பார்பதோடு சரி. ஒரு ஒருவாரம், பத்து நாள் லீவ் எல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. "என் கடமை பணி செய்து கிடப்பதே" அப்படியே கிடக்கவேண்டியதுதான்.
நான் சாயங்காலம் எழு மணி வாக்குல... அருகில் உள்ள பழ கடைக்கு செல்வதுண்டு. அங்கு ஒரு சிறு குடும்பம், அப்பா பழம் விற்பவர் (தள்ளு வண்டி), அவர் மனைவி, ஐந்து வயது மகன் துணைக்கு. இரண்டு வருடங்கள் போல அவர்களோடு பரிச்சியம் எனக்கு. எதிர்பாராத விதமாக அப்பா உடல் நிலை கோளாறினால் இறந்து விட்டார். அந்த அழகான குடும்பம் தத்தளித்து தடுமாறியது. அவர் மனைவி பழ கடை பொறுப்பை ஏற்று கொண்டாள். மகனை அருகில் உள்ள டூ வீலர் மெக்கானிக் ஒருவரிடம் வேலைக்கு சேர்த்துவிட்டாள். நான் எனனுடைய டூ வீலர் - அந்த மெக்கானிக்கிடம் தான் கொடுப்பது வழக்கம். அப்போதெல்லாம் அந்த சிறுவனையும் பார்ப்பது உண்டு. அதிகம் பேச முடியாது.. இரண்டு வார்த்தை பேசினாலே...மெக்கானிக் எதிர்பாரத இடத்தில் அடிப்பதையும் பார்த்திருக்கிறேன். (அந்த மெக்கானிக் அப்படியே பழகி விட்டார்.. அடித்தால்தான் பசங்க ஒழுங்கா வேலை பார்பாங்க என்பது அவர் சித்தாந்தம்) அதனால் சிரிப்பதோடு சரி. அவனிடம் இரண்டொரு வார்த்தை பேசுவதற்கு எனக்கு மட்டும் கொஞ்சம் சலுகை உண்டு . காலை ஒன்பது மணிக்கு வேலைக்கு வந்தால் இரவு பத்து பதினோரு மணி ஆகும் வேலை முடிவதற்கு. வேலை பெண்டு நிமிர்த்தும் வேலை.. சின்ன பையன்... பாவம்.. அசந்து போயிடுவான். சண்டே ஒரு நாள் லீவ். சனி கிழமை சாயங்காலமே அவன் முகத்தில் ஒளி அடிக்கும். ஒரு சண்டே, பொழுது போகாத சாயங்காலம் வேறு வழி இல்லாமல் ஒரு பிரபு படத்துக்கு போனேன். அங்கு கவுண்டர் அருகில் அந்த சின்ன பையன்... அவன் நண்பர்கள் இருவரோடு வந்திருந்தான். சிநேகமான சிரிப்புடன் பார்த்தவனை என்னுடன் படம் பார்க்க அழைத்து சென்றேன். படம் ஆரம்பித்ததில் இருந்து அவனும் அவன் நண்பர்களும் படத்தை மிகவும் ரசித்து பார்த்தார்கள்... எனக்குதான் அறுவை தங்கவே இல்லை. முக்கியமாக சண்டை காட்சிகளில் ஹீரோவுடன் நடிக்கும் சிரிப்பு நடிகர்களின் சேட்டைகளை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள்... கொஞ்ச நேரத்திலேயே எனக்கும் அவர்கள் வியாதி பற்றிக்கொண்டு, நானும் என்னை அறியாமலேயே ரசித்து சிரிக்க ஆரம்பித்து இருந்தேன். பின்பு அதை பற்றி யோசிக்கும் போது... கூத்து (கூத்தாடிகள்) என்பதே உழைத்து, களைத்தவர்களை சந்தோசப்படுத்த ஏற்படுத்தபட்டது அன்றி விமர்சன கத்திகள் பாய்வதற்கு அல்ல. படத்தின் இடைவேலையில் அவர்கள் அந்தப்படத்தில் பார்த்த கட்சிகளை பற்றி மிகுந்த சந்தோசத்துடன் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதை பார்க்க முடிந்தது. இதே கதையை, காட்சியை எத்தனை வருடத்திற்கு தான் கண்பிபார்களோ என்று நாமெலாம் அலுத்து கொள்வதுதுண்டு. என்னுடைய இரண்டு குழந்தைகளையும் தூங்க வைக்க நான் சொல்லும் (மூன் போய் முத்து வைத்த கதை, மந்திர கை மாயாளம் கதை) போன்றவரை இது வரை ஆயிரம் தடவை சொல்லிருப்பேன். என்றாலும் அவர்கள் அதை அவர்கள் ஓவ்வொரு முறை கேட்கும் போதும் புதிதாக கேட்பது மாதிரியே கேட்பார்கள். வேறு புதிய கதை மாற்றி சொன்னாலும் அவர்களுக்கு பிடிக்காது.எனவே ரசிகன் வேறு விமர்ச்சகன் வேறு. நான் ரசிகனாக சினிமாவை பார்ப்பதற்கு அந்த சிறுவர்கள் உதவினார்கள்.
சமீபத்தில், ஒரு சாய்ங்கால நேரத்தில் டீ குடிக்க சற்று காலார நடந்து சென்றேன். அங்கு அந்த மெக்கானிக் வந்திருந்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வரலாறு காணாத சம்பள உயர்வு - மாலை தினசரிகள் பறைசாற்றிகொண்டிருந்தன. பொதுவான விசாரிப்புக்கு பின்பு, என்ன சார், பொழப்பு, வாத்தியார்மாறுக சம்பளத்த பார்த்தீங்களா? நாம எல்லாம் ராத்திரி பகலா வேல பார்த்து கஷ்ட படுறோம். அவங்க சொகுசா இருக்காங்களே சார், என்று ஆதங்கபட்டார். அதற்கு நான், என்ன பண்ணுவது, நாமளும், அவங்களோடுதான் பஸ்ல போறதுக்கு டிக்கெட் (எங்க ஊர் பாசைல டிக்கெட்னா பார்டி மேலோகத்துக்கு கெலம்பிடாறுன்னு அர்த்தம்) எடுத்தோம்... அவங்களுக்கு உட்கார சீட் கிடைசிருசு, நாம் நின்று கொண்டு பயணம் செய்கிறோம்.. ஆனால் எல்லோரும் தான் காசு கொடுத்து டிக்கெட் எடுத்து இருகோம். என்ன ஒன்ணு, நாமாவது கொஞ்சம் நிம்மதியா பஸ் நடுவுல நிக்கிறோம்.. சிலபேரு படிகட்டுல கஷ்டப்பட்டு தொங்கிகிட்டு வாராங்களே .. அவங்கள பார்த்து நாம ஆறுதல் அடையவேண்டியதுதான். அவங்க, அவங்க ஸ்டாப் வந்தா எறங்கி போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் என்றேன் கொஞ்சம் தத்துவார்த்தமாக. டீ மாஸ்டர் சிநேகமான சிரிப்புடன் டீயா, காபியா என்றார். நான் இரண்டு டீ, ஒன்று மட்டும் டிஸ்போசபில் கப்புல என்றேன். அப்போது அங்கு டீ கிளாஸ் கழுவும் சிறுவனின் மண்டையின் பின்புறம் எதிர்பாராத விதமாக தட்டிய டீ மாஸ்டர், டீ கிளாஸ்எ ஒழுங்கா கழுவுனா, எல்லோரும் டீ கிளாஸ்ஏ குடிப்பாங்க, எனக்கு செலவு மிச்சம் என்றார். பையன் கண்ணில் தேங்கி இருந்த கண்ணீர் அவனது வலியை சொல்லியது. அப்போது அந்த மெக்கானிக்கிடம், தீடிரென்று ஞாபகம்வந்து உங்ககிட்ட வேல பார்த்த அந்த குட்டி பையன் இப்போ எங்கே இருகிறான்? என்று கேட்டேன். அதற்கு அவர் "அவன் போட்ட டீயதான் இப்போ நீங்க குடிச்சுகிட்டு இருக்கீங்க" அப்படீனார்.

Wednesday, October 7, 2009

அப்பா.. அவர் நம்ம தோஸ்த். அவர் சிரிக்காம, நம்மள சிரிக்க வைப்பாரு. இனிக்குim நம்ம சொந்தம், பந்தம் எல்லாம் நம்மள அவ்விங்க ஆட்டயில சேத்துகிரைங்கன்னா, அது அவராலதான். சினிமா, அரசியல் எத பத்தி வேணுமுனாலும் அவர் கிட்ட பேசலாம், ப்ரீயா... நம்ம குடும்பத்துல அம்புட்டு பேறும் வேலைக்கு போறவங்க.. நான் மட்டும் பிசினஸ் செய்றேன்னு சொன்னப சரிடா தம்பிநாரு.. அதுதான் எங்க நைனா... அது மட்டும் இல்ல நானும் ரகுவும் இளந்தாரி பயலுகலா இருக்குறப்ப... சொன்னா சிரிகதீங்க...ரகு பயல சினிமால சேர்க்கணும்னு ரொம்ப ஆசை அவருக்கு... நல்லா பாடுறான், நல்லா நடிகிறான் (ஸ்கூல் நாடகத்துல எல்லாம் சூப்பரா நடிப்பான்) அப்படினு அவருக்கு ஒரு ஆசை!
ஆபீஸ் போய்ட்டு, வீட்டுக்கு வந்துட்டா, முகத்த கழுவி, திருநூறு பூசி, சாமி கும்பிட்ட்டு வாங்கடா பசங்களானு கட்டிகிருவரு ... கொஞ்சம் திருநூறு, கொஞ்சம் ஆஸ்பத்திரி மருந்து வாட சேர்ந்து அடிக்கும் ... நடு வகுடு, சிரிச்ச மொகம், ஜாலியான பேச்சு, சுத்தமான கை நகங்கள் (ஹெல்த் இன்ஸ்பெக்டர்ல) ஒரு கால்ல, வளைந்த பெருவிரல் நகம் ... எத மறக்க? எத நினைக்க?

யார் சொன்னா? அவர் இல்லைன்னு? எனக்கு நம்பிக்கை இருக்கு, அவர் ஏதோ ஊருக்கு போய் ஊசி போட போய் இருகாரு, இதோ இப்ப வந்துருவாரு...

Tuesday, October 6, 2009

ராஜாவின் பார்வைல... அப்டீங்கற மாதிரி... முரளியின் பார்வை..... இதுல நம்ம பங்காளிக, சேக்காலிக பத்தி, தனி தனியா, சும்மா பிரிச்சு மேஞ்சுரலாம் அப்படின்னு ஒரு ஐடியா... எப்படி வசதி? அரம்பிச்சுரலாமா? ஜாக்கிரதை ... உங்கள பத்தியும் சேதி வரும் ... ரெடி ஆகிகங்க...
மொத மொத எங்க அப்பாரு பத்தி....

Monday, October 5, 2009

நம்ம குல தெய்வம் பேரு "குன்னா சாமி". (நொக்கிலிக்கபட்டது!!!???)
அநேகமா அது குரு சாமி (நம்ம தாதா பேரா இருக்கலாம்)
பாண்டவர்கள் (கண்ணன், ரவி, லக்ஷ்மி, மணி, ரகு, முரளி) பெரிய அளவுல குல தெய்வத கண்டுகாம இருக்குறதுக்கு கீழே உள்ள காரணங்கள் போதுமானு பாருங்க...
  • கல்யாணம் பண்ண வேண்டி அக்கா, தங்கச்சி எதுவும் இல்லை
  • பெரிய நோய், நொடி ஏதும் இல்லை (சுகர், பிபி வந்துரும்ங்க்ற பயம் மட்டும் உண்டு)
  • பிள்ளைகநாள பெரிய மன வருத்தம் கிடையாது (இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சுருக்கலாம்ங்கரத தவிர)
  • அப்பாமார்களுகே நம்ம குல தெய்வத பத்தி ஐடியா எதுவும் இருந்த மாதிரி தெரியல...
  • முக்கியமா குல தெய்வம் கோவிலுக்கு போய் பொங்கல் வைக்கணுமாம்... அதுவும் ஆம்பளைக சேர்ந்து .... முடியுமா? யார் சாப்டுறது அந்த பொங்கல?
இருந்தாலும் நம்ம சேக்காளிகள்ள ரெண்டு, மூணு பேர் மட்டும் குல தெய்வத பார்த்துட்டு வந்த கதைய சொலிட்டுதான் இருக்காக...
பார்க்கலாம், எப்பாவது நான் எழுமலைக்கு போன மாதிரி சேர்ந்து கோடூர் போனாலும் போனதுதான்...யார் கண்டா?

Friday, October 2, 2009

நம்ம குல தெய்வத்த பத்தி கொள்ள வருசமா, கொள்ள தடவ நம்ம ஆட்கள் பேசி, பேசி ஆளுக்கு ஒன்ன சொல்லி கடைசியா கண்டு பிடிச்சி சொன்னது, கோடூர் அப்படிங்கற ஊர்ல இருக்குற "குன்னா" சாமிதான் நம்ம குல தெய்வம், அந்த கோவில் எங்க இருக்குனா, கோயம்புத்தூர் மாவட்டத்துல இருக்குற அந்தியூர் (பழைய வீரப்பன் காடு) இருக்காம்... இந்த அந்தியூர் தான் நம்ம சிநேகிதி திருமதி அனன்யா பிறந்தாங்க! நாங்களும் எங்க அப்பா, அம்மா கூட அப்ப அந்த ஊருக்கு போய், குல தெய்வத்த பார்காம அனன்யா பார்த்துட்டு வந்தோம்.
அப்படினா?
கோடூர் - நம்ம குல தெய்வம் இருக்குற வூரு.
வாலு - community அப்படினும் வச்சுக்கலாம்.