மும்மூர்த்திகள் (ராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சுந்தரமூர்த்தி) என்றுதான் சொல்ல வேண்டும்... எல்லோரும் மாதிரி அண்ணன் தம்பிகள் தான் ... இருந்தாலும் அவர்களிடையே இருந்த பாசமும், அன்யோன்யுமும் எல்லோரிடமும் பார்க்க முடியாது. மூன்று பேரும் சேர்ந்தாசுன்னா ஒரே பேச்சுதான்... அப்படி என்னதான் பேசுவாங்களோ! வாழபழத்த சீப்பு சீபா வாங்கி வெச்சுகிட்டு ரூமுக்குள்ள மூணு பேரும் போய்ட்டா, இந்த உலகத்தையே மறந்திடுவாங்க.... சிரிப்பு சத்தம் மட்டும்தான் கேட்கும். சாயங்காலம் ஆச்சுனா மூணு பேரும் சேர்ந்து கடை வீதிகோ அல்லது ஆத்துகோ போவார்கள்... அப்போதும் ஒரே சிரிப்புதான். மூவரும் சேர்ந்து அவர்களுடைய அம்மாவிற்கு வைக்கும திவசம் ஒரு பெரிய திருவிழாவையே மிஞ்சிவிடும். மூன்று பேருக்குமே இம் மாதிரி சடங்குகளில் பெரிய பற்று ஒன்றும் கிடையாது. ஒரே ஒருமுறை அம்மாவின் திவசத்தை வைக்காமல் இருந்தது உண்டு. அதற்கு அடுத்து வந்த ஓரிரு மாதத்தில் கிருஷ்ணமூர்த்தி பெரியப்பா பாங்கில் ஆயிரம் ரூபாய் (அபோதெல்லாம் அது இன்றைய ஒரு லட்ச ரூபாக்கு சமம்) கணக்கில் விட்டு போயி மிகவும் அவருக்கு மன வருத்தத்தை கொடுத்தது. அது அவர்கள் அம்மாவின் திவசத்தை அவர்கள் உதசீனபடுத்தியதால் வந்தது என்று அதற்கு பின்பு அவர்கள் காலம் வரை விடாமல் திவசத்தை செய்து வந்தார்கள். திவசம் செய்துவைக்க போடி அருகில் உள்ள ஆண்டிபட்டிஇல் இருந்து ஒரு வாத்தியார் வருவது வழக்கம். அவர் ஆண்டிபட்டி வாத்தியார் என்று அழைக்கப்பட்டார். அதுவும் ஒரு கால கட்டத்தில் நின்று போயி ... மதுரையில் நாங்கள் இருக்கும் போது மடம் என்று அழைக்கப்பட்ட இதெற்கென இருக்கும் இடத்தில செய்ய தொடங்கினார்கள். அப்படித்தான் ஒருமுறை கிருஷ்ணமூர்த்தி பெரியப்பாவிடம் இருந்து, அம்மாவின் திவசத்தை மதுரையில் செய்யலாம் என்ற ஒப்புதலை அடுத்து எங்க அப்பா மடத்திற்கு சென்று ஏற்பாடுகளை செய்துவிட்டு வந்தார். திவசத்தின் முதல் நாளே செல்லமா பெரியம்மாவும், பெரியப்பாவும் மதுரை வந்துவிட்டார்கள். அன்று சாயங்காலமே அப்பாவும், பெரியப்பாவும் திவசதிற்கான ஏற்பாடுகளை பார்பதற்காக மதுரை சிம்மக்கல்லில் உள்ள மடத்திற்கு போயி பார்க்கும் போது மறுநாள் திவசம் செய்துவைக்கும் பிராமணர் வராததால், பலமான முயற்சிக்கு பின்பு ஒரு கனபாடிகள் (பெரிய வாத்தியார், மிகவும் ஆசார சீலர், வயதில் மிகவும் பெரியவர்) ஒருவர் வந்து நடத்தி கொடுப்பதாக வாக்குறுதி அளித்தவுடன், வீட்டிற்கு மிகுந்த சந்தோசத்துடன் வந்த அப்பாவும், பெரியப்பாவும் இரவு பூரம் அதை பற்றியே பேசி கொண்டிருந்தார்கள். ஆண்டிபட்டி வாத்தியார் ரொம்ப சாதாரணம், பல கிரமங்களை அவர் விட்டு விட்டார்... அந்த குறை எல்லாம் நாளைக்கு மொத்தமாக, கனபாடிகள் நடத்தி கொடுக்க இருக்கும் திவசத்தில் தீர்ந்துவிடும், சொல்லப்போனால் நாளைக்குத்தான் அவர்கள் அம்மா ஆத்மா சாந்தி அடையும்.. என்றெலாம் பேசிவிட்டு மறுநாள் பத்து மணிக்கு போகவேண்டிய மடத்திற்கு எட்டு மணிக்கே போயி சேர்ந்தார்கள். நானும் ரகுவும் ஸ்கூல் போயி விட்டு சாயங்காலம் வந்து பார்த்த போது அப்பாவின் முகமும் சரி இல்லை, பெரியப்பாவின் முகமும் சரி இல்லை.. பின்பு அம்மாதான் மடத்தில் நடந்ததை சொன்னார்கள். அன்று திவசம் நடக்கும் போது .. கனபாடிகள் திவச ஆரம்பத்தில், நீங்கள் எந்த வேதம் என்ற கேள்வி கேட்டு இருக்கிறார். அதற்கு அப்பா ஒரு வேதமும், பெரியப்பா ஒரு வேதமும் சொல்ல, கனபாடிகள் அப்போதே எரிசல் ஆகி இருக்கிறார். ஒரு வழியாக சமாளித்து வேதத்தை சொல்ல, அதன்பின்பு திவசத்தின் முடிவில் விளக்கு ஏற்றும் பழக்கம் உண்டா என்று கேட்க, அம்மாவும், பெரியம்மாவும் உண்டு என்று உண்மையை சொல்ல, கனபாடிகளுக்கு வந்ததே கோபம்... என்னயா இது? இந்த வேதத்திற்கு விளக்கு கிடையாதே!! நீங்க எல்லாம் உண்மையான பிராமணர்கள்தானா? ஏன்யா சாக போர நேரத்துல என் உயிரை வாங்குறீங்க? உங்க அம்மா இறந்து இருபது வருசத்துக்கு மேல ஆயிடுச்சுன்னு சொல்லறீங்க, ஆனா இன்னும் உங்க வேதம் கூட தெரியவில்லையே என்று மடார், மடார் என்று தலையிலேயே அடித்து கொண்டாராம்!!. பெரியப்பாதான் பயந்து போயி "வாடா போய்டலாம், செத்து கித்து போய்ட போறான், வந்துடறா என்று முடித்தும், முடிகாமலும் ஓடி வந்துடாங்கலாம்... அதிலிருந்தே நம்ம குடும்பத்து குடும்ப உறுதி மொழி "LESS மந்திரம் MORE MONEY".
Saturday, November 14, 2009
Sunday, November 8, 2009
திருப்பதி வெங்கியும் - ரீ மிக்ஸ்சும்...

எங்கே திரும்பினாலும் ரீ மிக்ஸ் கலாச்சாரம்தான் , இதிலிருந்து நம்ம வெங்கியின் சுப்ரபாதமும் தப்ப முடியலே! ஆனா இந்த ரீமிக்ஸ் கேட்க நல்லாத்தான் இருக்கு ...Snips site மெம்பர்கள் இதனை செல்லில் ரிங் டோனாக டவுன்லோட் (free SMS) செய்து வைச்சுக்கலாம் ! (சும்மா ப்ரீ மெம்பர்ஷிப்தான்) Try செஞ்சுதான் பாருங்களேன் !
லிங்கிற்கு ..
Saturday, November 7, 2009
Maddi மணி, Maddi முரளி
அது ஒரு கோடை காலம் .... எட்டோ ஒன்போதோ படித்து கொண்டு இருந்த நேரம்.... இப்பலாம் எங்க அப்பா, அம்மாவ எதிர்பர்காம.... எங்க ஊர்ல இருந்து, நானும், ரகுவுமா கிளம்பி போடி வர்ற அளவுக்கு வாழ்கைல பயங்கர முன்னேற்றம். அப்ப இந்த நர்மதா பொண்ணு பொறந்து, அதுக்கு ஒன்னு, ரெண்டு வயசு இருக்கும். எங்க அக்காவும் ரெண்டு பிள்ளைகளோட போடியிலதான் இருந்துச்சு. மாமா "சிக"வாசில (sivakasi - அப்படித்தான் நர்மதா பொண்ணு சொல்லும்) பேங்க் வேலைல இருந்தாரு. அக்கரகாரதுல line ஆ முதல்ல கிருஷ்ணமூர்த்தி பெரியப்பா வீடு அடுத்து ராமமூர்த்தி பெரியப்பா வீடு, அடுத்து அத்தை வீடு, அப்புறம் எங்கவீடு அடுத்து அடுத்து இருக்கும். பத்தும் பத்தாததுக்கு எதிர்த்த வீடு பெரிய வீடு (தமிழ் பண்டிதர்). அவர் மனைவி குப்பி மாமி (நானும் ரகுவும் சின்ன பசங்கள இருக்கும் போது குறத்தி வாடி என் குப்பின்னு பாடி அவங்க கிட்ட செல்ல டோஸ் வாங்கியது ஞாபகம் இருக்கு, அவங்க பழைய டால்டா டின்ல கரி அடுப்பு செய்றதுல எக்ஸ்பர்ட்) ஒரு தவக்கா, அப்படிதான் போடிக்கு நைட் போய் ஊர் சேர்ந்து .... சாப்ட்டு விட்டு இந்த நிம்மி, நம்மா கூட பேசி சிரிச்சுட்டு அப்டியே தூங்கி போய்டோம். தீடிர்னு அதி காலையில மூணு மணி இருக்கும், எதோ பாத்திரம் உருட்டுற சப்தம் கேட்டு, போய் பார்த்தா செல்லமா பெரியம்மா சூடா இட்லி ஊத்தி கொடுக்க இந்த குட்டி பொண்ணு நர்மதா சட்டமா உக்காந்து சாப்ட்டுகிட்டு இருக்குது.. என்ன பெரியம்மா மணி மூணு தான் ஆகுது இப்ப போயி, அபடின்னதுகு, பெரியம்மா, சின்னவ "புர்ரட்சி" பசின்னு எழுபின்னா அதுதான்னாங்க... (பாசகார பாட்டி). காலயில அன்னிக்கு பத்து மணிக்கெல்லாம் சூப்பர் சாப்பாடு செல்லமா பெரியம்மா கையாள... மணக்க, மணக்க திராட்ச கொத்து மாதிரி இருக்கும் வடு மாங்கா போட்டு மோர் சாப்பாட முடிச்சுட்டு எல்லோரும் உண்ட மயக்கத்துல .. ஆளுக்கு ஒரு பக்கமா hall -யே சாஞ்சிடோம். மணி தான் வந்து என்னை எழுபினான். வெயில் ஏற ஏற அவனுக்குத்தான் இருப்பு கொள்ளாதே! எந்திரி எந்திரி போடி மெட்டு வரைக்கும் போகலாம் வாங்காடானு கூப்பிட்டான். கண்ணன், ரவி, ரகு யாருமே அதுக்கு தயாரில்லை. இருந்தாலும் அவன் இம்சை தாங்காம, இந்தோ முரளிய கைபத்திகிட்டு நீ முன்னால போயி கிட்டே இரு.. நாங்க மூணு பேரும் பின்னாலேயே வந்துடுறோம்னு சொன்னத நம்ம்பி நானும் மணியும் புதிய உத்வேகத்தோட ஐந்துலான்தல் பக்கத்துல சைக்கிள் வாடகைக்கு எடுத்துகிட்டு சிட்டா பறந்துட்டோம். நாங்க புறப்படும் போது, அப்பதேன் அவிங்க மூணு பேரும் சைக்கிள் வாடகைக்கு பேசிகிட்டு இருந்தாங்க. மொத பத்து கிலோ மீட்டர் ஒரே வேகம்தான் ... அடுத்து ரோடு மல ஏற ஏற மூச்சு வாங்கி மிதிக்க முடியாம மிதிச்சு, பெடல் கட்ட பிஞ்சு போயி .... ஒரு அஞ்சாறு ஹேர்பின் வளைவுகளை கூட தண்ட முடியாமல் ... ஒரு ஓரமா ஓஞ்சு போயி உட்கார்ந்துட்டோம்.. (சரியான மே மாத வெயில்) அப்பதான் கவனிச்சோம் ... பக்கத்தில ஒரு சூப்பர் ஓடைய .... நல்லா குளிச்சுட்டு ... உக்காந்து யோசிச்சோம்... இன்னும் மேல போறதுக்கு வேறு வழி இல்லாமல் திரும்ப வேண்டியதாகி விட்டது. வந்து பார்த்த நாங்க ரெண்டு பேரும் எந்த நிலைமைல அந்த மூணு பேரையும் விட்டு போனோமோ அதே போஸ்ல மூணு பேரும் சூப்பரா படுத்து நிம்மதியா தூங்கிகிட்டு இருந்தைங்க.. எங்க ரெண்டு பேரையும் உசுபேத்தி, பின்னாடியே வர மாதிரி படம் காண்பிச்சு தொரத்தி விட்டு இம்சைக ஒழிந்ததுன்னு படுத்துட்டு இருந்தவைங்கள பார்த்து எங்களுக்கு கோபமே வரலையே ... ஏன்னா எங்களுக்குதான் கோபப்பட கூட சக்தி இல்லையே!!!! நாங்க போடி மேட்டுக்கு போயி சுத்தி பார்ததா விட்ட ரீலயாவது அவிங்க மூணு பேரும் ஒத்துகிட்டு இருந்திருந்தால் இப்ப இந்த post கே அவசியம் இல்லை. இதுல அடுத்து வந்த ரெண்டு நாளைக்கு இத சொல்லியே எங்க ரெண்டு பேரயும் ஓட்டிகிட்டு இருந்தைங்க. ஆனா ஒண்ணு.... சரோஜா பெரியம்மாதான் கரெக்டா சொன்னாங்க... Maddi மணி, Maddi முரளி.
Thursday, November 5, 2009
யானைக்கும் அடி சறுக்கும்???
TMS மற்றும் SPB இருவருமே அருமையான பாடகர்கள். ஆனால் சிவாஜி என்றாலே TMS குரல் மட்டும்தான் அவருக்கு பொருந்தி வரும்போல் தோன்றுகிறது. SPB, ஜேசுதாஸ் ஏன் சிலதடவை மலேசியா வாசுதேவன் கூட சிவாஜிக்குவாய்ஸ் கொடுத்திருக்கிறார் ஆனால் TMS க்கு இணை ஆக முடியவில்லையே !!
1979-ல் வெளியான படம் ‘நான் வாழ வைப்பேன்’. அந்தப் படத்துக்கு இசை இளையராஜா. அதில், ‘என்னோடு பாடுங்கள்... நல்வாழ்த்துப் பாடல்கள்...’ என்று ஒரு பாட்டு. எஸ்.பி.பி. பாடிய பாட்டு. அந்தப் பாட்டு சிவாஜிக்கு என்பதால், முதலில் அதை டி.எம்.எஸ்ஸை வைத்து ரெக்கார்ட் செய்தார்கள். பிறகு, அது சரியாக இல்லை என்று எஸ்.பி.பி-யைப் பாட வைத்து, அதைத்தான் படத்திலும், இசைத்தட்டிலும் வெளியிட்டார்கள்.இதில் டி.எம்.எஸ்ஸுக்குக் கோபமான கோபம். இருக்கத்தானே செய்யும்? அவர் கச்சேரிக்காக இலங்கைக்குப் போன இடத்தில் (மதுரை போல அங்கே டி.எம்.எஸ். ரசிகர்கள் அதிகம்.) இந்தத் தகவலைச் சொல்லி, அதே பாடலைப் பாடி, “நீங்களே சொல்லுங்க. இது நல்லாருக்கா, எஸ்.பி.பி. பாடியது நல்லாருக்கா?” என்று கேட்டாராம். ரசிகர்கள் ஏக மனதாக டி.எம்.எஸ். பாடியதுதான் நன்றாக உள்ளது என்று சொன்னார்களாம். இப்படியொரு செய்தியை நான் அந்தக் காலத்தில் படித்தேன்.
டி.எம்.எஸ்ஸுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் original SPB பாடின பாட்டு கேட்கிற வாய்ப்பு நெட்ல சுத்திவரப்ப கிடைச்சுச்சு உண்மையைச் சொல்கிறேன். எஸ்.பி.பி-யின் பாடல் அளவுக்குச் சிறப்பானதாக அது தெரியவில்லை.எஸ்.பி.பி. பாடிய ‘என்னோடு பாடுங்கள்...’ பாடல் நன்றாக இருந்தது. ஆனால், அது சிவாஜிக்குப் பொருத்தமானதாக இல்லை. டி.எம்.எஸ். பாடிய பாடல் அவ்வளவாகப் பிடித்தமானதாக இல்லை. என்றாலும், அதைக் கேட்கும்போது சிவாஜியின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை மனக் கண் முன் கொண்டு வர முடிந்தது.ஒரு வேளை டி.எம்.எஸ்., இளையராஜா இருவரும் அன்றைக்குக் கருத்தொருமித்து, விட்டுக் கொடுத்து, இன்னும் ஓரிரு தடவை முயன்றிருந்தால், நிச்சயம் டி.எம்.எஸ்ஸிடமிருந்து இதை விடச் சிறப்பான பாடல் நமக்குக் கிடைத்திருக்கக்கூடும்! சரி TMS வாய்சில் அந்த பாட்ட கேட்டு என்னோடு பாட ஆசைபட்ரவுகளுக்காக - download செய்ய இந்த லின்க கிளிக் செய்யுங்க ...http://www.muziboo.com/rushailaja/music/ennodu-padungal
படத்தில் இடம் பெற்ற SPB இன் இனிய குரலோசை கேட்க இந்த லிங்கினை கிளிக் செய்யவும் ... http://myspb.blogspot.com/2006/12/blog-post_31.html#links
Tuesday, November 3, 2009
மணி spio
அப்போதெல்லாம் போடிக்கு போவதென்றால் ரொம்ப ஜாலி... உச்சன் தலையிலிருந்து, உள்ளங்காலு வரைக்கும் ஒரு இனிப்பு ஓடும், உடம்பெல்லாம் ஒரு பரபரப்பு ஒட்டிக்கும். போன உடனே மணி கேட்கும் முதல் கேள்வி ... எப்போ ஊருக்கு போகணும்? புதுசா பார்க்குறவங்களுக்கு... வித்தியாசமாதான் தெரியும்... காரணத்த சொல்லிட்டா உண்மை புரியும். எத்தன நாள் தங்குரோம்னு தெரிஞ்சா ... schedule போட வசதியா இருக்கும்ல... இறங்குன அன்னிக்கி ஒரு படம், மக்காநாளு காலைல வெயிலு நல்லா ஏறும் போது சைக்கிள் எடுத்துகிட்டு கிளம்பினா... ஊருக்கு பக்கத்துல இருக்குற பரமசிவன் மல, எதோ ஒரு ஊத்து இருக்குற எடம், ஆத்தோரம், ரயிலடி இப்படி பல எடத்துக்கும் போக நேரமே பத்தாது. உச்சி வெயில் மண்டைய பொலகும்போது வீடு வந்து ... மணியோட பாட்டி கத்த கத்த டம்ளர், டம்ளறா தண்ணிய எச்சி வச்சு குடிச்சுட்டு, சரியா சோற்று திங்காம ... மூணு மணிக்கெல்லாம் கடல, பலா சொல ன்னு போட்டு அமுக்கிட்டு ... திரும்ப சாயங்காலம் சினிமாவுக்கு குட்டி அம்மாவுக்கு துணையா போய் எதாவது ஒரு மொக்க படத்துகாவது போய் உட்கார்ந்துட்டு, வர வழில ... விஜயா லாட்ஜ் கடைல, சூடா, முருகலா, வாசனையா, சாம்பார், சட்டினி வெச்சு கொழச்சு அடிச்சிட்டு, உப்பு கெணத்து ஏரியால சொசைட்டி பால வாங்கிகிட்டு வீட்டுக்கு வந்து சும்மா சுண்ட சுண்ட காச்சி அடிச்சிட்டு, நாலு பச்ச வாழபழதையும் அமிகிட்டு படுத்தா ... சும்மா போடி கிளைமேட்டுக்கு சொர்கம்தான் போங்க.... நானும், ரகுவும் எங்க அப்பா அம்மா கூட பிளான் பண்ணி வர்றது மூணு நாளைகின்னாலும் ... இந்த பயலுக ...ரவி, கண்ணன், மணி கெஞ்சுற, கெஞ்சுல எங்க அப்பாரு மனசிறங்கி எப்படியும் மேலும் ஒருநாளாவது இருந்துதான் கிளம்புவோம். இருந்தாலும் பொழுது பத்தவே பத்தாது. சொச்சத அடுத்த ட்ரிப்புல தான் சரி கட்டணும்னு பேசி பிரியறது. ஊருக்கு கிளம்புற அன்னிக்குதான் பெரிய திருவிழாவா இருக்கும். அஞ்சு பயலுகளும் மூஞ்சிய சுண்டகா மாதிரி வெச்சுகிட்டு திசைக்கு ஒருத்தர் பார்த்துகிட்டு, ரெண்டு மூணு நாளா மொகமெல்லாம் சிரிப்போட அலைஞ்ச பசங்க இவிங்கதானான்னு சந்தேகம் வராப்ல சோகமே உருவா இருப்பானுங்க. உக்காந்து போக வசதியா, போடி பஸ் ஸ்டாண்ட் போக, ரவி அல்லது கண்ணன் போய் குதுர வண்டி பிடிச்சுட்டு வர, அதுல ஏறி பஸ் ஸ்டாண்ட் போய் எங்க ஊரு போற பஸ்ல (ஏழுமல, கருங்காலக்குடி.....) ஏறி, பஸ் கொஞ்சம் பஸ் ஸ்டாண்ட் மூத்திர வாடைய காண்பிச்சுட்டு, ஒரு திரும்பு திரும்பி கொஞ்சம் ஏலக்கா, சாக்கட, மரிகொழுந்து வாசனை மற்றும் பன்னி தரிசனம் முடிந்து பஸ் மதுரை மெயின் ரோட்டுக்கு திரும்பி நிக்கும் போது அங்கும் காத்திருபாய்ங்க நம்ம பங்காளிக....
இப்படி சந்தோசமா போன வாழ்கையிலதான் ராமமூர்த்தி பெரியப்பா இறந்த சேதி தந்தியில் இடி மாதிரி இறங்கியது... போகும் வழி எல்லாம் நம்மூரு மக்க எங்கியோ, எதுக்கோ அரக்க பறக்க போய்கிட்டு இருந்தத பார்க்க வித்தியாசமா இருந்துசு. இருந்தாலும் அந்த இருக்கமான சூழ்நிலையில எங்க நைனாகிட்டயோ, அம்மகிட்டேயோ கேட்க முடியல. அடிச்சு, பிடிச்சு போடி வந்து இறங்கின நாங்க ஒரு நிலைமைக்கு வர அர நாலு ஆயிடுச்சு. இருந்தாலும் அந்த மணி பய ஏதோ சொல்ல துடிகிறான் ... என்னனுதான் தெரியல... கொஞ்ச நேரம் கழித்து .... ஒரு வழியா சொந்தங்கள சரிகட்டி ... அவங்க கிட்ட இருந்து தப்பித்து, என்னையும், ரகுவையும் கூட்டிகிட்டு, பின்புறம் உள்ள கொய்யா மரத்துக்கு பக்கதிலுள்ள படி ஏறி...மொட்ட மாடிக்கு போய், அவசரமா கூடி, என்னடா மணின்னு கேட்டதுக்கு .....
கரெக்டா கண்டு பிடிகிறவங்களுக்கு.... நம்ம ஊரு வடு மாங்கா ஊருகா price !!!
இப்படி சந்தோசமா போன வாழ்கையிலதான் ராமமூர்த்தி பெரியப்பா இறந்த சேதி தந்தியில் இடி மாதிரி இறங்கியது... போகும் வழி எல்லாம் நம்மூரு மக்க எங்கியோ, எதுக்கோ அரக்க பறக்க போய்கிட்டு இருந்தத பார்க்க வித்தியாசமா இருந்துசு. இருந்தாலும் அந்த இருக்கமான சூழ்நிலையில எங்க நைனாகிட்டயோ, அம்மகிட்டேயோ கேட்க முடியல. அடிச்சு, பிடிச்சு போடி வந்து இறங்கின நாங்க ஒரு நிலைமைக்கு வர அர நாலு ஆயிடுச்சு. இருந்தாலும் அந்த மணி பய ஏதோ சொல்ல துடிகிறான் ... என்னனுதான் தெரியல... கொஞ்ச நேரம் கழித்து .... ஒரு வழியா சொந்தங்கள சரிகட்டி ... அவங்க கிட்ட இருந்து தப்பித்து, என்னையும், ரகுவையும் கூட்டிகிட்டு, பின்புறம் உள்ள கொய்யா மரத்துக்கு பக்கதிலுள்ள படி ஏறி...மொட்ட மாடிக்கு போய், அவசரமா கூடி, என்னடா மணின்னு கேட்டதுக்கு .....
கரெக்டா கண்டு பிடிகிறவங்களுக்கு.... நம்ம ஊரு வடு மாங்கா ஊருகா price !!!
Sunday, November 1, 2009
பிரியங்களுடன் ரகு
அன்பு
நண்பர்களே! பாசமுள்ள பெரியோர்களே! (சும்மா சாலமன் பாப்பையா மாதிரி ஒரு
பில்டப்) என்னோட பழைய rediff மற்றும் google மெயில்களை என்னால open
செய்யமுடியல அத யாருக்கோ தானம் பண்ணியாச்சு (!). அப்புறம்தான் தெரிஞ்சிச்சு மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் மெயில open பண்ணலைனா அது out ஆயிடும்னு!என்னபன்றது, எனக்கு office மெயில் பார்த்து reply பண்றத்துக்கே நேரம் போறலையே (மெய்யாலுமே) சரி இப்ப இந்த மெயிலுக்கான காரணத்த பாப்போம். என்னோடஆபீஸ் மெயில் id க்கு நம்ம நண்பர்கள் வட்டம் தினமும் நூத்துக்கணக்கான மெயில்கள அனுப்பி என்னை எப்படியாச்சும் அதி புத்திசாலி ஆக்கிரனும்னு தொடர்ந்து விக்கிரமாதித்தன் மாதிரி முயற்சி செஞ்சுட்டு வராங்க அதிலும் குறிப்பா சந்தானராஜ், Hanil Logaiah சார் மற்றும் நாதன்&நாதன்
சீனிவாசன் (௦01.11.09 அன்று மதுரைல இவருக்கு கல்யாணம்- வாழ்த்துக்கள்)
போன்ற அருமை நண்பர்கள் தங்களுக்கு வரும் அணைத்து SMS மற்றும்மெயில்களையும் நானும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் எனக்கு forward செய்கிறார்கள். என்னோட office மெயில நிறைய folder போட்டு personal, unread இன்னு பிரிச்சு பிரிச்சு தாவு தீந்து போச்சு ! நம்ம EDP மணிகண்டன் வேற சார் பெர்சனல் மெயில்கள google மாதிரி id கொடுத்து உங்க பிரன்டுகல அனுப்ப சொலுங்கன்னு ஒரே நச்சரிப்பு .
சரின்னு நம்ம ramram100 - rediff mail ஓபன் பண்ணின அது ஒர்க் ஆக மாட்டேன்கிறது.எல்லோரும் rediff வேஸ்ட் அப்படினு சொன்னதாலே gmail account ஆரம்பிக்க போனால் ramram 100 அப்படிங்கிற id கிடைகல (ஏற்கனவே ஒருத்தரு அந்த id ய ஆட்டே போட்டுடாரு !) வேறு வழி இல்லாம 100ramram அப்படிங்கிற id
கஷ்டப்பட்டு எடுத்தா அத ஒரே நாள்தான் use பண்ணிருப்பேன் அடுதததடவ open
செய்யபோனா username தப்பு password தப்புன்னு ஒரே தப்புதாலங்கள போடுது !
திரும்பவும் try செய்தப்ப வேற ஒருத்தர் இந்த account use செஞ்சுட்டு இருக்காங்கன்னு சந்தேகமான்னு நம்மளையே கேள்வி வேற கேட்குறாங்க ! என்ன கொடுமைடா இதுன்னு அந்த அக்கௌன்ட் எல்லாம் விட்டுபுட்டு திரும்பவும் office mail id மாத்திரம் use பண்ண ஆரம்பிச்சுடேன்.
தொடர்ந்து விடாகண்டன் (சாரி மணிகண்டன்) தொல்லை தாங்காம இப்ப புது id open பண்ணிருக்கேன்.
புதுசா மெயில் id open பண்றது ஒரு பெரிய கலை அப்படின்னு எனக்கு உணர்த்திய சம்பவம் இது.. எந்த பேர் கொடுத்தாலும் ஏற்கனவே அந்த id இருக்குது வேற பேர் try பண்ணுன்னு அதுவா இஷ்டம்போல கஷ்டமான பேர் கொடுக்குது. கடைசில எங்க அப்பா பேர்ல இருக்குற சுந்தரத்தையும் எனோட பேர்ல இருக்குற ரகுவையும் சேர்த்து sundarmraghu (அப்படியும் அப்பா பேர்ல sundram - a -miss ஆகி sundrm திரிஞ்சு போச்சு! சுந்தரம்னாலும் அழகு, ரகுன்னாலும் ஆற்றல் மிக்க அழகுனு அண்ணன் மோகன் shtyle.fm ல சொன்னது ஞாபகம் வந்ததும் சரி இதவிட அம்சமான id கிடைக்காதுன்னு முடிவு பண்ணி ) இதையே என்னுடைய நிரந்தர id யாக declare செய்கிறேன்.
பழைய அனுபவம் காரணமாக இந்த id ய உடனடியா கொடுக்காம ஒரு மாத காலம் ICU வில் வைத்து வேருயாரும் இந்தமுறை ஆட்டேய போடவில்லை என்பதை உறுதி செய்தபின்பே இந்த id இனை இன்று release தேதியினை குறித்தேன் ! (இன்னைக்கி என்னுடைய wedding day என்பதும ஒரு special)
இந்த மெயிலை நான் தொடர்ந்து நல்ல முறையில் பராமரிப்பேன் என்பதால் என்னுடைய இந்த புதிய gmail id க்கு மட்டும் மேலான மெயில்களை அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன். (பழைய rediff மற்றும் gmail id க்கு இனிமேல் யாரும் தயவு
செய்து உங்கள் மெயில்களை அனுப்ப வேண்டம் -அவைகள் out of order).
தினமும் மாலை மெயில்கள் படிக்கப்பட்டு, உடனடியாக reply தரப்படும் எனவும் இதன் மூலம் உறுதி அளிக்கிறேன்
பிரியங்களுடன் உங்கள்
ரகு
Subscribe to:
Comments (Atom)
