Tuesday, October 13, 2009

ரசிக மகா ஜனங்களே!!!

நாங்க (அதாவது வணிகர்கள்) கொஞ்சம் பாவப்பட்ட ஜென்மங்கள் அப்படின்னு சொல்லலாம். எப்படி, இப்படி பொசுக்குனு சொல்லுறியே அப்படின்னு கேட்டிங்கன்னா...
எங்களுக்கு ஒரு நல்ல "பொன் மாலை பொழுது" கிடையாது... சாயங்காலம் ஐந்து மணிக்கு மேல்தான் வேலையே.. இரவு பத்து, பதினோரு மணிவரைக்கும் போகும்.. சாயங்காலம் குடும்பத்தோடு வண்டி, வாகனத்தில் சிரித்து கொண்டும், பேசி கொண்டும் செல்பவர்களை ஏக்கதோடு பார்பதோடு சரி. ஒரு ஒருவாரம், பத்து நாள் லீவ் எல்லாம் நினைத்தே பார்க்க முடியாது. "என் கடமை பணி செய்து கிடப்பதே" அப்படியே கிடக்கவேண்டியதுதான்.
நான் சாயங்காலம் எழு மணி வாக்குல... அருகில் உள்ள பழ கடைக்கு செல்வதுண்டு. அங்கு ஒரு சிறு குடும்பம், அப்பா பழம் விற்பவர் (தள்ளு வண்டி), அவர் மனைவி, ஐந்து வயது மகன் துணைக்கு. இரண்டு வருடங்கள் போல அவர்களோடு பரிச்சியம் எனக்கு. எதிர்பாராத விதமாக அப்பா உடல் நிலை கோளாறினால் இறந்து விட்டார். அந்த அழகான குடும்பம் தத்தளித்து தடுமாறியது. அவர் மனைவி பழ கடை பொறுப்பை ஏற்று கொண்டாள். மகனை அருகில் உள்ள டூ வீலர் மெக்கானிக் ஒருவரிடம் வேலைக்கு சேர்த்துவிட்டாள். நான் எனனுடைய டூ வீலர் - அந்த மெக்கானிக்கிடம் தான் கொடுப்பது வழக்கம். அப்போதெல்லாம் அந்த சிறுவனையும் பார்ப்பது உண்டு. அதிகம் பேச முடியாது.. இரண்டு வார்த்தை பேசினாலே...மெக்கானிக் எதிர்பாரத இடத்தில் அடிப்பதையும் பார்த்திருக்கிறேன். (அந்த மெக்கானிக் அப்படியே பழகி விட்டார்.. அடித்தால்தான் பசங்க ஒழுங்கா வேலை பார்பாங்க என்பது அவர் சித்தாந்தம்) அதனால் சிரிப்பதோடு சரி. அவனிடம் இரண்டொரு வார்த்தை பேசுவதற்கு எனக்கு மட்டும் கொஞ்சம் சலுகை உண்டு . காலை ஒன்பது மணிக்கு வேலைக்கு வந்தால் இரவு பத்து பதினோரு மணி ஆகும் வேலை முடிவதற்கு. வேலை பெண்டு நிமிர்த்தும் வேலை.. சின்ன பையன்... பாவம்.. அசந்து போயிடுவான். சண்டே ஒரு நாள் லீவ். சனி கிழமை சாயங்காலமே அவன் முகத்தில் ஒளி அடிக்கும். ஒரு சண்டே, பொழுது போகாத சாயங்காலம் வேறு வழி இல்லாமல் ஒரு பிரபு படத்துக்கு போனேன். அங்கு கவுண்டர் அருகில் அந்த சின்ன பையன்... அவன் நண்பர்கள் இருவரோடு வந்திருந்தான். சிநேகமான சிரிப்புடன் பார்த்தவனை என்னுடன் படம் பார்க்க அழைத்து சென்றேன். படம் ஆரம்பித்ததில் இருந்து அவனும் அவன் நண்பர்களும் படத்தை மிகவும் ரசித்து பார்த்தார்கள்... எனக்குதான் அறுவை தங்கவே இல்லை. முக்கியமாக சண்டை காட்சிகளில் ஹீரோவுடன் நடிக்கும் சிரிப்பு நடிகர்களின் சேட்டைகளை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார்கள்... கொஞ்ச நேரத்திலேயே எனக்கும் அவர்கள் வியாதி பற்றிக்கொண்டு, நானும் என்னை அறியாமலேயே ரசித்து சிரிக்க ஆரம்பித்து இருந்தேன். பின்பு அதை பற்றி யோசிக்கும் போது... கூத்து (கூத்தாடிகள்) என்பதே உழைத்து, களைத்தவர்களை சந்தோசப்படுத்த ஏற்படுத்தபட்டது அன்றி விமர்சன கத்திகள் பாய்வதற்கு அல்ல. படத்தின் இடைவேலையில் அவர்கள் அந்தப்படத்தில் பார்த்த கட்சிகளை பற்றி மிகுந்த சந்தோசத்துடன் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டதை பார்க்க முடிந்தது. இதே கதையை, காட்சியை எத்தனை வருடத்திற்கு தான் கண்பிபார்களோ என்று நாமெலாம் அலுத்து கொள்வதுதுண்டு. என்னுடைய இரண்டு குழந்தைகளையும் தூங்க வைக்க நான் சொல்லும் (மூன் போய் முத்து வைத்த கதை, மந்திர கை மாயாளம் கதை) போன்றவரை இது வரை ஆயிரம் தடவை சொல்லிருப்பேன். என்றாலும் அவர்கள் அதை அவர்கள் ஓவ்வொரு முறை கேட்கும் போதும் புதிதாக கேட்பது மாதிரியே கேட்பார்கள். வேறு புதிய கதை மாற்றி சொன்னாலும் அவர்களுக்கு பிடிக்காது.எனவே ரசிகன் வேறு விமர்ச்சகன் வேறு. நான் ரசிகனாக சினிமாவை பார்ப்பதற்கு அந்த சிறுவர்கள் உதவினார்கள்.
சமீபத்தில், ஒரு சாய்ங்கால நேரத்தில் டீ குடிக்க சற்று காலார நடந்து சென்றேன். அங்கு அந்த மெக்கானிக் வந்திருந்தார். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வரலாறு காணாத சம்பள உயர்வு - மாலை தினசரிகள் பறைசாற்றிகொண்டிருந்தன. பொதுவான விசாரிப்புக்கு பின்பு, என்ன சார், பொழப்பு, வாத்தியார்மாறுக சம்பளத்த பார்த்தீங்களா? நாம எல்லாம் ராத்திரி பகலா வேல பார்த்து கஷ்ட படுறோம். அவங்க சொகுசா இருக்காங்களே சார், என்று ஆதங்கபட்டார். அதற்கு நான், என்ன பண்ணுவது, நாமளும், அவங்களோடுதான் பஸ்ல போறதுக்கு டிக்கெட் (எங்க ஊர் பாசைல டிக்கெட்னா பார்டி மேலோகத்துக்கு கெலம்பிடாறுன்னு அர்த்தம்) எடுத்தோம்... அவங்களுக்கு உட்கார சீட் கிடைசிருசு, நாம் நின்று கொண்டு பயணம் செய்கிறோம்.. ஆனால் எல்லோரும் தான் காசு கொடுத்து டிக்கெட் எடுத்து இருகோம். என்ன ஒன்ணு, நாமாவது கொஞ்சம் நிம்மதியா பஸ் நடுவுல நிக்கிறோம்.. சிலபேரு படிகட்டுல கஷ்டப்பட்டு தொங்கிகிட்டு வாராங்களே .. அவங்கள பார்த்து நாம ஆறுதல் அடையவேண்டியதுதான். அவங்க, அவங்க ஸ்டாப் வந்தா எறங்கி போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் என்றேன் கொஞ்சம் தத்துவார்த்தமாக. டீ மாஸ்டர் சிநேகமான சிரிப்புடன் டீயா, காபியா என்றார். நான் இரண்டு டீ, ஒன்று மட்டும் டிஸ்போசபில் கப்புல என்றேன். அப்போது அங்கு டீ கிளாஸ் கழுவும் சிறுவனின் மண்டையின் பின்புறம் எதிர்பாராத விதமாக தட்டிய டீ மாஸ்டர், டீ கிளாஸ்எ ஒழுங்கா கழுவுனா, எல்லோரும் டீ கிளாஸ்ஏ குடிப்பாங்க, எனக்கு செலவு மிச்சம் என்றார். பையன் கண்ணில் தேங்கி இருந்த கண்ணீர் அவனது வலியை சொல்லியது. அப்போது அந்த மெக்கானிக்கிடம், தீடிரென்று ஞாபகம்வந்து உங்ககிட்ட வேல பார்த்த அந்த குட்டி பையன் இப்போ எங்கே இருகிறான்? என்று கேட்டேன். அதற்கு அவர் "அவன் போட்ட டீயதான் இப்போ நீங்க குடிச்சுகிட்டு இருக்கீங்க" அப்படீனார்.

1 comment:

  1. excellent!!! ரசிகன் வேறு விமர்ச்சகன் வேறு- very nice... to the point, very crisp to read. konjam emotional factor jaastiya irukkaraapla irukku..

    ReplyDelete