அன்றும் வழக்கம் போல் "குட்டி டாட்டா" சும்மா ஒரு ரவுண்டு டூ வீலர்ல.. குட்டி பையன் அருணை ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள ரயில்வே கேட் வரும்போது கேட் போட்டு இருந்தது. கொஞ்சம் தள்ளி, கடந்து செல்லும் ரயில் தெரியும் படி அருகில் உள்ள பெட்டி கடை வாசலில் வண்டியை நிறுத்தி நானும் அருணும் காத்திருந்தோம். கேட் திறந்தவுடன் மக்கள் அவசர அவசரமாக, ஒருவர் மேல் ஒருவர் இடித்து கொண்டு ரயில்வே லைன்ஐ கடந்து கொண்டு இருந்தார்கள். அப்போதுதான் அவனை கவனித்தேன்.. புதிய பைக்.. முன்புறம் ஒரு குட்டி பையன்.. அருண் வயது இருக்கும்.. மிக வேகமா ரயில்வே லைன்ஐ கடந்து வந்து நாங்கள் நின்று கொண்டு இருக்கும் பெட்டி கடை அருகில் உள்ள சிறிய திருப்பத்தில் திருப்பும் போது வேகம் காரணமாக வண்டி சரிந்து இருவரும் விழுந்தார்கள். நான் அருணை இறக்கி விட்டு, போவதற்குள் டீ கடையில் டீ குடித்து கொண்டு இருந்த பெரியவர் ஒருவர் வேகமாக ஓடி சென்று விழுந்த வண்டியை தூக்கிய ஜோரில், யாரும் எதிர்பரக்கவில்லை, அந்த அடி அடி அடித்தார் அந்த ஆளை. சரியான திட்டு வேறு. ஏன்டா சின்ன பையனை முன்னாடி வெச்சுகிட்டு இந்த ஸ்பீட்ல வரலாமாடா? அடித்த அடி தாங்காமல் வேகமாக வண்டியை எடுத்து கொண்டு நிமிடமாக இடத்தை காலி செய்தான் அவன். திட்டி கொண்டே டீ கடைக்கு வந்தவரை அங்கு இருந்த டீ கடை கடைகாரர் கேட்டார், அந்த ஆள் உங்களுக்கு உறவா? அதெல்லாம் ஒன்னும் இல்லை, கிறுக்கு பய இந்த ஸ்பீட்ல வண்டி ஓட்டலாமா? அதுவும் சின்ன பையன முன்னாடி வெச்சுகிட்டு? என்றார். எனக்கு மனதில் தோன்றியது இதுதான்... அவனுக்கும், அவருக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, ஆனாலும் அவர் அவன் செய்த தப்பை உரிமையோடு கண்டிக்கிறார்... அவனும் ஒரு சின்ன எதிர்ப்பின்றி அதை எதிர்கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றது எனக்கு சொல்லாமல் சொல்லியது இதுதான் ... பாசகார பய ஊரு அய்யா இது ... இங்கு வாழ்வதுதான்சரி... நமக்கு அரணாக உறவுகள்தான் வரவேண்டும் என்பது இல்லை ... இந்த ஊரும், மனிதர்களும்மே அதை பார்த்துகொள்வார்கள்
Subscribe to:
Post Comments (Atom)

very touching.. orey oru information mattum missing.. paasakkaara paya ooru.. but edhu? i mean ooru peru ezhadaliye.. pls quote the same.
ReplyDeletenice write up.. inge oru notable point, endha edhirppum illaama andha payyan thittu vaangindu odippoittan.. nice perception to see things.
எந்தூரு, எங்க ஊரு மதுர தான்... மதுர னா மதுர ஜில்லாவில இருக்குற எல்லா ஊரும் தான், நம்ம போடிநாயகனூரும் தான்.
ReplyDelete