1979-ல் வெளியான படம் ‘நான் வாழ வைப்பேன்’. அந்தப் படத்துக்கு இசை இளையராஜா. அதில், ‘என்னோடு பாடுங்கள்... நல்வாழ்த்துப் பாடல்கள்...’ என்று ஒரு பாட்டு. எஸ்.பி.பி. பாடிய பாட்டு. அந்தப் பாட்டு சிவாஜிக்கு என்பதால், முதலில் அதை டி.எம்.எஸ்ஸை வைத்து ரெக்கார்ட் செய்தார்கள். பிறகு, அது சரியாக இல்லை என்று எஸ்.பி.பி-யைப் பாட வைத்து, அதைத்தான் படத்திலும், இசைத்தட்டிலும் வெளியிட்டார்கள்.இதில் டி.எம்.எஸ்ஸுக்குக் கோபமான கோபம். இருக்கத்தானே செய்யும்? அவர் கச்சேரிக்காக இலங்கைக்குப் போன இடத்தில் (மதுரை போல அங்கே டி.எம்.எஸ். ரசிகர்கள் அதிகம்.) இந்தத் தகவலைச் சொல்லி, அதே பாடலைப் பாடி, “நீங்களே சொல்லுங்க. இது நல்லாருக்கா, எஸ்.பி.பி. பாடியது நல்லாருக்கா?” என்று கேட்டாராம். ரசிகர்கள் ஏக மனதாக டி.எம்.எஸ். பாடியதுதான் நன்றாக உள்ளது என்று சொன்னார்களாம். இப்படியொரு செய்தியை நான் அந்தக் காலத்தில் படித்தேன்.
டி.எம்.எஸ்ஸுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் original SPB பாடின பாட்டு கேட்கிற வாய்ப்பு நெட்ல சுத்திவரப்ப கிடைச்சுச்சு உண்மையைச் சொல்கிறேன். எஸ்.பி.பி-யின் பாடல் அளவுக்குச் சிறப்பானதாக அது தெரியவில்லை.எஸ்.பி.பி. பாடிய ‘என்னோடு பாடுங்கள்...’ பாடல் நன்றாக இருந்தது. ஆனால், அது சிவாஜிக்குப் பொருத்தமானதாக இல்லை. டி.எம்.எஸ். பாடிய பாடல் அவ்வளவாகப் பிடித்தமானதாக இல்லை. என்றாலும், அதைக் கேட்கும்போது சிவாஜியின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை மனக் கண் முன் கொண்டு வர முடிந்தது.ஒரு வேளை டி.எம்.எஸ்., இளையராஜா இருவரும் அன்றைக்குக் கருத்தொருமித்து, விட்டுக் கொடுத்து, இன்னும் ஓரிரு தடவை முயன்றிருந்தால், நிச்சயம் டி.எம்.எஸ்ஸிடமிருந்து இதை விடச் சிறப்பான பாடல் நமக்குக் கிடைத்திருக்கக்கூடும்! சரி TMS வாய்சில் அந்த பாட்ட கேட்டு என்னோடு பாட ஆசைபட்ரவுகளுக்காக - download செய்ய இந்த லின்க கிளிக் செய்யுங்க ...http://www.muziboo.com/rushailaja/music/ennodu-padungal
படத்தில் இடம் பெற்ற SPB இன் இனிய குரலோசை கேட்க இந்த லிங்கினை கிளிக் செய்யவும் ... http://myspb.blogspot.com/2006/12/blog-post_31.html#links

முதலாவது: சிவாஜி படங்கள் நான் அதிகம் பார்த்ததில்லை
ReplyDeleteஇரண்டாவது: நான் தீவிர SPB பக்தை. சாயிராம், பிள்ளையார் இவங்கல்லாம் கூட அடுத்து தான்.
மூன்றாவது: நீங்க அனுப்பின பாட்டு கேட்க சூப்பரா தான் இருந்தது.ஆனா, untill I listen to SPB's Version, cant record my comments. Judgement reserved. :-P
PS: My husband just loved TMS's Version and remarked, "It is Ultimate" ... well.. can be.
அதெல்லாம் சரி, மதுரை வடு மாங்காய் வரல்லையே..யானைக்கும் அடி சருக்குமுன்னு எல்லாம் போட்டா நாங்க மணி Spio part 2 மறந்துருவோமா?is anyone with me???
சரி இப்ப original song லிங்க் இங்கேயிருக்கு கேட்டுட்டு சொல்லவும்
ReplyDeletehttp://myspb.blogspot.com/2006/12/blog-post_31.html#links
ReplyDeleteMama
ReplyDeleteI heard both the versions. Surprised to learn that SPB sang in a slightly lower shruthi than TMS and Honestly speaking, TMS is way way way ahead compared to SPB's rendering. His effortless singing style, clarity, pitch and voice timbre is totally mind blowing!
TMS wins.