Tuesday, November 3, 2009

மணி spio

அப்போதெல்லாம் போடிக்கு போவதென்றால் ரொம்ப ஜாலி... உச்சன் தலையிலிருந்து, உள்ளங்காலு வரைக்கும் ஒரு இனிப்பு ஓடும், உடம்பெல்லாம் ஒரு பரபரப்பு ஒட்டிக்கும். போன உடனே மணி கேட்கும் முதல் கேள்வி ... எப்போ ஊருக்கு போகணும்? புதுசா பார்க்குறவங்களுக்கு... வித்தியாசமாதான் தெரியும்... காரணத்த சொல்லிட்டா உண்மை புரியும். எத்தன நாள் தங்குரோம்னு தெரிஞ்சா ... schedule போட வசதியா இருக்கும்ல... இறங்குன அன்னிக்கி ஒரு படம், மக்காநாளு காலைல வெயிலு நல்லா ஏறும் போது சைக்கிள் எடுத்துகிட்டு கிளம்பினா... ஊருக்கு பக்கத்துல இருக்குற பரமசிவன் மல, எதோ ஒரு ஊத்து இருக்குற எடம், ஆத்தோரம், ரயிலடி இப்படி பல எடத்துக்கும் போக நேரமே பத்தாது. உச்சி வெயில் மண்டைய பொலகும்போது வீடு வந்து ... மணியோட பாட்டி கத்த கத்த டம்ளர், டம்ளறா தண்ணிய எச்சி வச்சு குடிச்சுட்டு, சரியா சோற்று திங்காம ... மூணு மணிக்கெல்லாம் கடல, பலா சொல ன்னு போட்டு அமுக்கிட்டு ... திரும்ப சாயங்காலம் சினிமாவுக்கு குட்டி அம்மாவுக்கு துணையா போய் எதாவது ஒரு மொக்க படத்துகாவது போய் உட்கார்ந்துட்டு, வர வழில ... விஜயா லாட்ஜ் கடைல, சூடா, முருகலா, வாசனையா, சாம்பார், சட்டினி வெச்சு கொழச்சு அடிச்சிட்டு, உப்பு கெணத்து ஏரியால சொசைட்டி பால வாங்கிகிட்டு வீட்டுக்கு வந்து சும்மா சுண்ட சுண்ட காச்சி அடிச்சிட்டு, நாலு பச்ச வாழபழதையும் அமிகிட்டு படுத்தா ... சும்மா போடி கிளைமேட்டுக்கு சொர்கம்தான் போங்க.... நானும், ரகுவும் எங்க அப்பா அம்மா கூட பிளான் பண்ணி வர்றது மூணு நாளைகின்னாலும் ... இந்த பயலுக ...ரவி, கண்ணன், மணி கெஞ்சுற, கெஞ்சுல எங்க அப்பாரு மனசிறங்கி எப்படியும் மேலும் ஒருநாளாவது இருந்துதான் கிளம்புவோம். இருந்தாலும் பொழுது பத்தவே பத்தாது. சொச்சத அடுத்த ட்ரிப்புல தான் சரி கட்டணும்னு பேசி பிரியறது. ஊருக்கு கிளம்புற அன்னிக்குதான் பெரிய திருவிழாவா இருக்கும். அஞ்சு பயலுகளும் மூஞ்சிய சுண்டகா மாதிரி வெச்சுகிட்டு திசைக்கு ஒருத்தர் பார்த்துகிட்டு, ரெண்டு மூணு நாளா மொகமெல்லாம் சிரிப்போட அலைஞ்ச பசங்க இவிங்கதானான்னு சந்தேகம் வராப்ல சோகமே உருவா இருப்பானுங்க. உக்காந்து போக வசதியா, போடி பஸ் ஸ்டாண்ட் போக, ரவி அல்லது கண்ணன் போய் குதுர வண்டி பிடிச்சுட்டு வர, அதுல ஏறி பஸ் ஸ்டாண்ட் போய் எங்க ஊரு போற பஸ்ல (ஏழுமல, கருங்காலக்குடி.....) ஏறி, பஸ் கொஞ்சம் பஸ் ஸ்டாண்ட் மூத்திர வாடைய காண்பிச்சுட்டு, ஒரு திரும்பு திரும்பி கொஞ்சம் ஏலக்கா, சாக்கட, மரிகொழுந்து வாசனை மற்றும் பன்னி தரிசனம் முடிந்து பஸ் மதுரை மெயின் ரோட்டுக்கு திரும்பி நிக்கும் போது அங்கும் காத்திருபாய்ங்க நம்ம பங்காளிக....
இப்படி சந்தோசமா போன வாழ்கையிலதான் ராமமூர்த்தி பெரியப்பா இறந்த சேதி தந்தியில் இடி மாதிரி இறங்கியது... போகும் வழி எல்லாம் நம்மூரு மக்க எங்கியோ, எதுக்கோ அரக்க பறக்க போய்கிட்டு இருந்தத பார்க்க வித்தியாசமா இருந்துசு. இருந்தாலும் அந்த இருக்கமான சூழ்நிலையில எங்க நைனாகிட்டயோ, அம்மகிட்டேயோ கேட்க முடியல. அடிச்சு, பிடிச்சு போடி வந்து இறங்கின நாங்க ஒரு நிலைமைக்கு வர அர நாலு ஆயிடுச்சு. இருந்தாலும் அந்த மணி பய ஏதோ சொல்ல துடிகிறான் ... என்னனுதான் தெரியல... கொஞ்ச நேரம் கழித்து .... ஒரு வழியா சொந்தங்கள சரிகட்டி ... அவங்க கிட்ட இருந்து தப்பித்து, என்னையும், ரகுவையும் கூட்டிகிட்டு, பின்புறம் உள்ள கொய்யா மரத்துக்கு பக்கதிலுள்ள படி ஏறி...மொட்ட மாடிக்கு போய், அவசரமா கூடி, என்னடா மணின்னு கேட்டதுக்கு .....

கரெக்டா கண்டு பிடிகிறவங்களுக்கு.... நம்ம ஊரு வடு மாங்கா ஊருகா price !!!

6 comments:

  1. எப்போ ஊருக்கு போறீங்க?" Question Paper லேயே answer இருக்கே..
    As far as my memory goes, I had been asking this very question ever since I had been a child. Whoever comes to bodi or vijayawada is welcomed with this question by me. It is a child psychology to ensure that the guests are around for a while. It is also to set its expectations and to avoid disappointments. I have pleaded many times to all guests to stay longer when I hear that they will be leaving soon after food or early morning next day.
    The description of Bodi Bus stand is amazing. We can feel it as we are reading the post.
    Eagerly awaiting the next post.

    ReplyDelete
  2. murali sbio,
    theriyalayappa!!!
    bodi mettukku pona kadha ellam eludhalayppa..

    ReplyDelete
  3. No, wrong Ans Annanya...........

    ReplyDelete
  4. Anna, bodi mettukku pona kadha ellam, Viraivil.....

    ReplyDelete
  5. Intha madurai slang tamil ketu romba naal achu...was missing it very much, now felt happy after reading this ;-) BTW enna answer? innuma part 2 post panala neenga???

    ReplyDelete
  6. பார்ட் 2 சென்சார் பண்ணியாச்சு .... ஆனா மணி கேட்டது... நாம ஊர் பக்கத்துல சினிமா சூட்டிங் நடக்குது தெரியுமா? இன்னிக்கு போயி பார்க்க முடியவே முடியாது.... நாளைக்கு முடியாது .... நாளைக்கு மறுநாள் போகலாமா? நீங்க எப்போ ஊருக்கு போகணும்?

    ReplyDelete